16 December 2011

கற்பனை உலகம்


கற்பனை உலகம் அது
யாரும் கண்டிடாத
உலகம் அது...

அமைதியின் உலகம் அது
எல்லோர் கனவிலும் 
உதயம் அது...

நீதியின் உலகம் அது
எல்லோர் நினைவிலும் 
உதயம் அது...

ஒழுக்கத்தின் உலகம் அது
எல்லோர் மனதிலும் 
உதயம் அது...

பண்பின் உலகம் அது
எல்லோர் கண்ணிலும் 
உதயம் அது...

சமத்துவ உலகம் அது
எல்லோர் கையிலும் 
உதயம் அது...

அன்பின் உலகம் அது
எல்லோர் பாதையிலும் 
உதயம் அது...

கற்பனையின் உலகம் இது
என் கனவில் கட்டிய 
உலகம் இது...

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...