08 January 2011

நான் தூங்கிய நட்கள்


மாய உலகில்

பிறந்தது எதற்கு

தோழா---


எங்கும் கேட்கிறது

அணுகுண்டன் ஓசை….

பிறந்தது முதல்

கல்லறை வரை

போராட்டம்……


எங்கும்

சிதறியது உடல்கள்…..

பிரிந்நது உயிர்கள்…..


காணும் தூரம் வரை----

யுத்தகளங்கள்……

கேட்கும் தூரமெல்லாம்

அழுகுரல்…..

கண் இமைக்கும்

நேரத்தில்----

கல்லறையாய் போனது……


விழி மூடி தூங்கினால்

கணணில் தெரிவது

ஏழைகளின் அவலம்……

காதில் கேட்கிறது

கதறல்….


நான் தூங்கிய மாதங்கள்

பத்து மட்டுமே…..

                 அதுவோ-----

                                 
                             தாயின்

                       கருவறையில்….
.

1 comment:

  1. நான் தூங்கிய நாட்கள்
    பத்து மட்டுமே…..
    அதுவோ-----
    தாயின்
    கருவறையில்…..


    மிகவும் உண்மையான வரிகள் .....

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...