27 January 2011

உண்மை இந்தியன்

எழுது கோலை பிடித்து
எழுதும் வயதில்
எதிரியை தேடி
ஆயுதம் எடுக்கும்
உலகமிது----

அன்று

பாரத தாயை காக்க
சத்தியம் என்னும்
ஆயுதத்தை கத்தியாக
கொண்டான் – காந்தி……
அவர் மார்புக்கு
தோட்டாக்கள் தான் பரிசா------

எழுத்துக்களை ஆயுதங்களாய்
தொடுத்தான் பாரதி….
ஒவ்வொனறும் வில்லிருந்து
புறப்படும் அம்புகளாக
இதையத்தை கழித்துச் சென்றது...

இன்றோ

மின் விழக்குகளில் பாடங்களை
கற்றவர் இந்தியாவின்
முதல் குடிமகனானர்………

அவரே வியப்பூட்டும்
விஞ்ஞானத்தை வளர்க்கும்
சக்தியும் ஆனார்…….

கனவு காணுங்கள் என்று
இளைய தலைமுறையை
ஊக்குவிக்கும்
தலைவரும் அவரே-------

நரைகள் பல விழுந்தும்
கரை படியாத இதையத்தின்
கனவு ஒன்றுதான-------
அதுவோ-------
இந்தியா வல்லரசாவது……..

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...