18 April 2011

மதவாதம்


ரத்தத்தின் நிறம்

ஒன்று தானே--

அதை

பார்க்க துடிப்பதேன்…..


மனிதா---

மதம் என்னும்

பெயரைச் சொல்லி

நித்தம் ரத்தம் உறிஞ்சும்

புழுவாக இராதே----


உயிர் கொடுக்கும்

பெலிக்கான்

பறவையாக இரு…


தெய்வம் ஒன்று தானே….


மனிதா----


நீ மட்டும்

ஏன் 


தனியாய் பிரிந்து 

கொண்டாய்…… 


மதம் என்னும்

பெயரைச் சொல்லும்

மத வாதிகள்

தினம் அதன் பெயரால்

உயிரை எடுப்பதா…!


      “ஆண்டவனுக்கு

        சொந்த மான உரிமையை

         மனிதா

         நீயே கையில் எடுத்தால்…!..”


சூரியனை போல

ஒழிர வேண்டிய

இழைஞன் மனதில்

மதம் என்னும்

விஷத்தை கலப்பதா---!


திசை திருப்புவதா---!


தீவிரவாதி ஆக மாற்றுவதா---!


வழிகாட்ட

நல்ல வழிகாட்டி

கிடைத்திருந்தால்

இவனும்

அப்துல்கலாம் ஆகியிப்பானே…..!

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...