28 April 2011
26 April 2011
25 April 2011
19 April 2011
அன்பென்றொரு ஆயுதம்
அன்பு என்ற ஒன்று போதுமே----
ஆயுதம் என்ற சொல்லை மாற்றிடவே…
ஆதாயம் தேடி அலையும்
மனிதர்கள் மத்தியில்
ஆயுதம் எதற்கு…?
ஈகை பல புரிந்திடுவோம்----
உண்மையாய் வாழ்ந்திடுவோம்....
ஊனமாய் இருப்பவனையும்---
எதற்கும் துணிந்தவன் ஆக்குவோம்....
ஏக்கம் என்பதை மனதில் வைத்து---
ஐயம் என்பதை மறந்து---
ஒன்றிணைந்த மனதராய்---
ஓசையில்லாமல்---
ஔகாரமாய் வழ்ந்திடுவோம்....
18 April 2011
மதவாதம்
ரத்தத்தின் நிறம்
ஒன்று தானே--
அதை
பார்க்க துடிப்பதேன்…..
மனிதா---
மதம் என்னும்
பெயரைச் சொல்லி
நித்தம் ரத்தம் உறிஞ்சும்
புழுவாக இராதே----
உயிர் கொடுக்கும்
பெலிக்கான்
பறவையாக இரு…
தெய்வம் ஒன்று தானே….
மனிதா----
நீ மட்டும்
ஏன்
கொண்டாய்……
மதம் என்னும்
பெயரைச் சொல்லும்
மத வாதிகள்
தினம் அதன் பெயரால்
உயிரை எடுப்பதா…!
“ஆண்டவனுக்கு
சொந்த மான உரிமையை
மனிதா
நீயே கையில் எடுத்தால்…!..”
சூரியனை போல
ஒழிர வேண்டிய
இழைஞன் மனதில்
மதம் என்னும்
விஷத்தை கலப்பதா---!
திசை திருப்புவதா---!
தீவிரவாதி ஆக மாற்றுவதா---!
வழிகாட்ட
நல்ல வழிகாட்டி
கிடைத்திருந்தால்
இவனும்
அப்துல்கலாம் ஆகியிப்பானே…..!
14 April 2011
அரளி பூ வசம் தான்....

அனால்
கனிந்திடும் கனியோ----
அரளி பூவின் வாசத்தை விட
எழுந்திடும்
போர் கொடிகள் எத்தனை..?.....
கட்சிக்காக
பேனா பிடிப்பவன்
கைகளில்
கட்சிக் கொடிகளா------
பாவம்
வாழ்வை தொலைக்க
வேண்டிய அவலம்…..
கந்தல் ஆடை உடன்
வருபவனை
கட்டுகள் காட்டி
கட்சியை வளர்க்கும்
கட்சிகாரர்கள்……
தலைவனுக்காக
தன்னையே அழிக்கும்
மூடர்கள்
இங்கு மட்டுமா-----
சாதிக்கொரு கட்சி……
வீதிக்கொரு கட்சி…..
எதற்கு…?....
சரித்திரம் படைத்த தலைவர்கள்
பல வாழ்ந்த
நாடு இது
அதை சுட்டெரிக்க துடிப்பதேன்…?....
மெள்ளமே சுரண்டி
வெள்ளாமை எடுத்து
மக்களை ஏமாற்றுவதா ------
இவர்களை தண்டிக்க
சட்டங்கள் ஏது…?....
பட்டங்கள் பெற்ற
சட்ட மேதைகள் கூட
இவர்கள்
கை கூலியாம்…….
கடவுளென நினைக்கும்
சட்டங்களே
சதி இடம் ஆனால்
திட்டங்கள் என்று சேர்ந்திடும்......
குடிசைகள் என்று மலர்ந்திடும்......
நாடு என்று வளர்ந்திடும்......
13 April 2011
முதல் முத்தம்
முதல் முத்தம்
அது
அன்னை
தந்த முத்தம்……
அன்பு முத்தம்
அது
பாசத்தில்
கலந்த முத்தம்……
பண்பு முத்தம்
அது
நினைவோடு
நிலைத்த முத்தம்……
இன்ப முத்தம்
அது
முதல் முதலாய்
சுவைத்த முத்தம்…..
கன்னி முத்தம்
அது
கன்னத்தில்
சிவந்த முத்தம்…..
செல்ல முத்தம்
அது
என உயிரில்
கலந்த முத்தம்….
நான் மண்ணில் பிறந்திட-----
அவள்
கண்கள் சிவந்து
இன்ப வெள்ளத்தில்
தந்த முத்தம்
அது
என் அன்னை
தந்த
முதல் முத்தம்…..
11 April 2011
சிறு கவிதைகள்
மணக் கோலத்தில்
நீ
இருக்க ----
துணை தேடி
நானும் வந்தோனடி.....
வினை செய்ய அல்ல.....
என் வழ்வை
தேடி.......
************************************
கனவில் வந்து
உயிரில் கலந்தவளே----
என்றும்
உன் நினைவாலே -----
வாழும் என் இதயம்
உன்னை
சுற்றியே திரிந்திடும்..........
நான் மரணத்தை
தாண்டிய பின்பும்........
என்
நினைவுகளாக-----
09 April 2011
திசை மாறிய பறவை
(“…..ஒரு அழகிய நகரமதிலே வாழும் இழைஞன் திசை
மாறிய பறவைாய்……….. கற்ப்பனை கலந்து…….”)
அவள் பெயர் வாசுகி, கணவன் பெயர் செல்வம். இந்த இவர்களுக்கு
பிறந்தவன் தான் பாலா. செல்வமோ பெயருக்கு தான் கணவன் குடும்பத்தில் சிறிதும் பொறுப்பில்லை. குடியே குடித்தனமாக கொண்டு வாழ்ந்து தன்
வாழ்வையே முடித்துக் கொண்டான். தன் கணவனால் அவளுக்கு கிடைத்ததோ
ஊர் முழுவதுமாக கடன் மட்டுமே.
அந்த பிஞ்சு வயது முதலே பாலாவோ கஸ்டங்களை மட்டும் பார்த்து
பார்த்தே வழர்ந்து வந்தான். வாசுகியோ ஏதோ வீட்டு வேலைகளை பார்த்து தன்
மகனை படிக்க வைத்து வந்தாள்.
பாலா நன்றாக படிப்பான் படு சுட்டி பையன். வாசுகியோ தினம் தினம்
தன் மகன் படிப்பதை கண்டு தான் படும் கஸ்டங்கள் ஒவ்வொன்றையும்
சந்தோசமாய் தாங்கிக் கொண்டாள்.
தன் மகனை தன்னால் முடிந்த வரை படிக்க வைத்தாள். அப்படியே சிறிது
காலம் ஓடியது. அவளும் நோய்வாய் பட்டு படுக்கையானாள். அப்பொழுது
பாலா 10ஆம் வகுப்பு தேர்வு முடித்த விடுமுறை காலமது. பாலாவோ தன்
அன்னையை காக்க வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். தனக்கு கிடைத்த
வருமானத்தில் தன் அன்னையின் மருத்துவ செலவையும் வீட்டு செலவையும்
பார்த்து வந்தான்.
அப்பொழுது தேர்வு முடிவுகளும் வந்தது பாலாவோ நல்ல மதிப்பெண்
பெற்றிருந்தான் அவனுக்கோ படிக்க வேண்டும் என்று ஆசை தான் என்ன
செய்வது என்று தெரியாமல் தவித்தான். தன் அன்னையையும் பார்த்து கொள்ள
வேண்டும் படிக்கவும் வேண்டும். எப்படியோ கஷ்டங்களை சமாளித்து ஒரு
வழியாக படிப்பை தொர்ந்தான்
சரியாக தூக்கம் இல்லை. இரவு நேரங்களிலும் வேலைக்கு செல்வன்.
அவ்வப்போது கிடைக்கும் சமைகளில் புத்தகங்களை புரட்டிக் கொள்வான்.
எப்படியோ ஒருவழியாக பள்ளி படிப்பை முடித்த சமயம் அது அவன்
அன்னையும் அவனை விடு பிரிந்தாள். சோகங்களை மட்டும் தெரிந்த
அவனுக்கு அதுவும் ஒரு சோகமாகத் தான் இருந்தது. அவனும் அனாதை
ஆனான். இருந்தும் தான் படிப்பை விடவில்லை தொடர்ந்து கல்லூரி படிப்பை
எட்டினான் பல கனவுகள் பூத்த வனாய்.
கல்லூரியல் தான் ஒரு ஏழையாக காட்டி கொள்ள மாட்டான். எல்லா
இளஞனை போல அவனும் கல்லூரியல் சகஜமாக தான் பழகுவான். கல்லூரி
முடித்ததும் வளக்கம் போல் வோலைக்கு சொல்வான். இப்படியாக அவன்
வாழ்வு ஓடியது.
அன்றும் அவ்வாறே வேலைக்கு சென்றான் அன்று அவன் வேலை
செய்யும் விடுதியில் இரு நபர்களின் பழக்கம் புதிதாய் கிடைத்து.
“..அந்த இருவரும் ஒரு தீவிரவாத இயக்கத்தை
சேர்ந்தவர்கள் என்பது பாலுவுக்கு தெரியாது.. ”
அவர்கள் இருவரும் பாலாவிடம் நெருங்கி பழகினார்கள். அவனை
தன்னுடன் கூட்டி செல்ல வாய்ப்பு தேடி காத்திருந்தனர். எந்த வாயிப்பும்
அவர்களுக்கு கிடைக்க வில்லை.
பின்னர் தானே வாயிப்பை உருவாக்கி கொண்டனர். பாலா வேலை
செய்யும் இடதில் இருத்து திருடி விட்டு பழியை பாலாவிடம் போட்டனர்.
பாலா வழக்கம் போல வேலைக்கு வந்தான். முதலாளியிடம் சென்று
தனக்கு செமஸ்டர் பீஸ் கட்ட வேண்டும் என்று சம்பளத்தை கேட்டான்.
“..அது அவனுக்கு கல்லூரி இறுதி ஆண்டு..”.
முதலாளியோ என்னிடமே திருடி விட்டு சம்பளமா கேட்கிறாய் என்று
சொல்லி உதைதான். பாலாவோ ஒன்றும் அறியாதவனாய் திகைத்தான். அவன்
என்ன சொல்லியும் முதலாளியோ கேட்ட பாடில்லை. அந்த மாத சம்பளமும்
அவனுக்கில்லை.
மனதை சற்று தேற்றிக் கொண்டவனாய் பரிட்சை எழுத பணம்
எவ்வாறு கட்ட என் யோசனையிலே வீதி ஓரமாய் நடந்தான்.
சரி கடன் வாங்கி கட்டி விடலாம் என்று சிறு தைரியத்தை
வரவழைத்து கொண்டவனாய் பாலா கடன் கேட்க ஆரம்பித்தான் அவன் கடன்
கேட்ட ஒவ்வொரு மனிதனும் சொன்ன பதில்கள் ஒவ்வொன்றும் பாலாவின்
இதையத்தில் ஈட்டி என பாய்ந்தது.
மனம் நொந்து சற்று குழம்பியவனாய் வரும் வழியில் அவன் வேலை
செய்த விடுதியில் பழகிய இருவரும் வந்தனர். ஒன்றும் அறியாதவர்களை
போல் பாலாவிடம் ஏன் என்று கேட்க மனம் நொந்தவனாய் அவனும்
ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான்.
“..கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல..”
அந்த இருவரும் பேச்சுக் கணைகளை தொடுத்தனர். அவர்கள் சொன்ன
ஒவ்வொரு வார்தைகளும் பாலாவிற்கு இதமாக இருந்நது. பாலா சற்றே
தடம்புரள ஆரம்பித்தான். பரிட்சை எழுத கட்ட வேண்டிய பணத்தையும்
கொடுத்தனர். கண்கள் கலங்கியவனாய் நின்றான்.
அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை ஒவ்வொன்றும் அவன்
சிந்தனையில் எழ மனம் நொந்து பாதை தடுமாறியவனாய் சென்றான்
அவர்களோடு.
மனிதா..!
நீ மனித இதையங்களை
சிதைக்க துடிப்பது
ஏன்…?
சிதைந்த இதையங்கள்
ஒவ்வொன்றும்
சிந்தனை இல்லாமல்
சிக்கி விட்டால்
சிக்கல்கள் தீர்ந்திடுமா-----
இல்லை
துப்பாக்கி தோட்டாக்களும்
மனித வெடி குண்டுகளுமே
தீர்வென்றால் என்றால்
நீ எதற்கு…..?
உதவி கரம் நீட்டி
மனிதம் மலர்ந்திட
இணைந்திடுவோம்
அன்பென்னும்
கூட்டினிலே…..
06 April 2011
நீயே தெய்வம்
ஓடி செல்லும்
நதிகளே-----
கொஞ்சம் நில்லுங்க…….
நீந்தி செல்லும்
மீன்களே-----
கொஞ்சம் நில்லுங்க….
நான் சொல்லும்
கதையை
கொஞ்சம் கேளுங்க-----
தாயே !..
ஒரு ஜென்மம் போதாதே
நீ தந்த அன்பு…..
மற்றொரு ஜென்மம்
வேண்டி நின்றேன்
உன்னை வணங்கிட….
நீயும்….
பத்து மாதம்
சுமந்தாயே----
உயிர் கொடுத்து
என்னை ஈந்றிட….
நானும் இங்கு
தூங்கிட……
நீயும்
கண் விழித்தாயே
தாலாட்டு பாடிட------
05 April 2011
என்றும் உன் நினைவாக….
தாண்டி சென்ற
என்னால்------
உன்னை தாண்டி
செல்ல முடிய வில்லை……
நீ எந்தன்
உயிரோடு கலந்தவளா----
இல்லை
என்னை கைது செய்ய வந்த
காதலியா-----
என்
இதயத்தை பிளக்கும்
ஈட்டி என
என்னை
கொள்ளை கொண்டவளே------
ரத்த நாணங்கள் துடிக்க
என் உயிரில் கலந்து
ஏன் என்னை வதைத்தாய்…….
என்னை கொன்றாலும்
என் உயிர் துளிகள்
சொல்லிடும்
உன் பெயரை !.....
04 April 2011
எழுத்துக்கள்
எழுத்துக்களை சேர்த்தால்
எதுவும் செய்திடலாம்…..
ஆனால் அது-----
எழுத்தாளன் பேனா
முனையிலிருந்து
புறப்படும் பூவை போன்றது…….
சுதந்திரம் என்னும்
தீயை ஊட்டிட----
இந்த எழுத்துக்களும்
ஒரு காரணமாம்……
ஆம்
பாரதி எழுதினான்---
பாரத தாயைக் காக்க…….
அவருடைய
ஒவ்வொரு எழுத்துக்களும்
சுதந்திர தீயை ஊட்டியது……
பச்சிளம் குழந்தைக்கு
பால் கொடுக்கும்
தாய் கூட-----
பாரதியின்
கவி பாடி
பாலூட்டிய
காலமும் உண்டு…..
ஆனால்
இன்றைய மனிதன்
எழுதுகின்றான்
கன்னியை பார்த்து….
கண்ணே மணியே
என்று
எதற்கு ?.....
இன்றைய மனிதன்
எழுதுகின்றான்
கன்னியை பார்த்து….
கண்ணே மணியே
என்று
எதற்கு ?.....
Subscribe to:
Posts (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
உன் பாத சுவடுகள் ஒவ்வொன்றும் எனக்கு பாசறைகளா--- இல்லை எனது வாழ்க்கைகா... இதோ !--- தனிமை என்னை வாட்டிட உன் பாத ச...
-
60 seconds makes an minit 60 minutes makes an hour 24 hour makes an day 7 days makes an weak 4 weeks makes an month 12 months makes an year...
-
எழுத்துக்களை சேர்த்தால் எதுவும் செய்திடலாம்….. ஆனால் அது----- எழுத்தா ள ன் பேனா முனையிலிருந்து புறப்படும் பூவை போன்றது……. ...