31 January 2011

பனித்துளி


துளித் துளியாய்
சிந்திடும் நீ---
முத்து முத்தாய்
தெரிந்திடுவாய்
காலை பொழுதிலே----

தன் அழகிய முத்தத்துடன்
பூக்களையும் புல்வெளிகளையும்
வருடிக்கொண்டு--
மனித இதையங்களை
சிலிர்க்க செய்திடுவாய்----

பகலவனை கண்டதும்
தன்னை மெல்லமே 
ஒளிந்து கொள்வாய்---
அவன் ஒளியினிலே---
குழந்தை தன்
தாயின் மடியில்
ஒளிந்து கொள்வது போல....

மீண்டும் அந்த
புல்வெளியை நோக்கி
காத்திருப்பா

ய்

ஏக்கத்துடன்....
தன் அழகிய முத்தங்களால்
பிம்பங்களை பதிய செய்திட…….

30 January 2011

என்றும் பூவாக…….


பூ என அவளை தாங்குகின்றான்
முட்களை மட்டும் 
தன்னோடு வைத்துக்கொண்டு......
என்றும் அவளை
பூவாக வைத்திட....

Life in minit’s and seconds


60 seconds makes an minit

60 minutes makes an hour

24 hour makes an day

7 days makes an weak

4 weeks makes an month

12 months makes an year

AN year makes the count of an age

                         Time is precious and use it…….


29 January 2011

பெண்களே அழிவுப்பாதையை ஏன்?....

நீ பிறந்தாலே
செலவு என்று எண்ணி
உன்னை கருவிலே
அழிக்க நினைப்பவரை
மன்னியாதே


கன்னிப் பருவுமதிலே
எத்தனை கனவுகள்
அதை சுட்டெரிப்பதோ
வரதட்சனை என்னும்
காட்டுத் -- தீ

நீ காதலிக்க நினைத்தால்
காதலி 
அதற்காக
உனனை தொலைத்து விடாதே……..

பெண்ணே..!---
உன்னை விலைப்போடடு
எடுத்துக்கொள்ள
இடம் கொடுப்பதா------

மாடலிங் என்ற பெயரில்
கோவண துணியுடன்
பவனிவருவதா-------

கலாச்சாரத்தை அழிப்பதா-------

ஈனத் தரையதிலை
உன்னை இழப்பதா------

பெண்ணினமே..!-----

நீ சந்தித்ததுணடா
இது 
அழிவு பாதையை
நோககி செல்லும்
பயணம் என்று …….

.

27 January 2011

ஒன்றாய் இருந்த நினைவுகள்


ன்பு என்னும் கடலிலே---

னந்தமாய் சறகடிக்க----

ன்பம் என்னும் படகிலே----

போல உன்னை தொடர்ந்திட----

ள்ளத்தை கடத்தி

மையாக்கி சென்றவளே-----

ன் இதையத்தின்

க்கங்களை கண்டுகொள்ளாமல் போவதேன்------

ம்பது வயதிலும்

ன்றாக இருந்ந ஞாபகம் என்னில்

ராயிரம் நாட்கள் சென்றதே

                  அதை நினைத்து………

உண்மை இந்தியன்

எழுது கோலை பிடித்து
எழுதும் வயதில்
எதிரியை தேடி
ஆயுதம் எடுக்கும்
உலகமிது----

அன்று

பாரத தாயை காக்க
சத்தியம் என்னும்
ஆயுதத்தை கத்தியாக
கொண்டான் – காந்தி……
அவர் மார்புக்கு
தோட்டாக்கள் தான் பரிசா------

எழுத்துக்களை ஆயுதங்களாய்
தொடுத்தான் பாரதி….
ஒவ்வொனறும் வில்லிருந்து
புறப்படும் அம்புகளாக
இதையத்தை கழித்துச் சென்றது...

இன்றோ

மின் விழக்குகளில் பாடங்களை
கற்றவர் இந்தியாவின்
முதல் குடிமகனானர்………

அவரே வியப்பூட்டும்
விஞ்ஞானத்தை வளர்க்கும்
சக்தியும் ஆனார்…….

கனவு காணுங்கள் என்று
இளைய தலைமுறையை
ஊக்குவிக்கும்
தலைவரும் அவரே-------

நரைகள் பல விழுந்தும்
கரை படியாத இதையத்தின்
கனவு ஒன்றுதான-------
அதுவோ-------
இந்தியா வல்லரசாவது……..

26 January 2011

இதோ அழைக்கிறாள் எம் தேசத்தாய்........


சந்திக்க வந்த வேளையில்

சாதிக்க சொன்னாய்......

சிந்தித்த நேரத்தில்

சீராக்க சொன்னாய்.....

சுமைகள் பல சுமந்து

சூட்சிகள் செய்யாமல்

செந்தமிழ் பேசி

சேதம் இல்லாமல்

சொக்கி தவிக்கும் மக்களுக்கு

சோகங்களை நீக்கி

நீதி தேவதையின் முன்னால்

கட்டவுள்த்திட------

கண்சிமிட்டும் நேரமதிலே

சிக்கி போகும் மக்களை

காத்திட-------

எம் கரங்களோடு

கரம் சேர எழுந்து வா

--------------------------என் தோழனே…!.......

தொலைந்து விடாதே....


புன்னகை கண்டு

மயங்காதே------

கண்கள் கண்டு

கரையாதே-------

காதல் என்பது சுகம்தான்……..

அதற்காக

வாழ்க்கை எனபது சுமை அல்ல

காதலில் விழுந்து

வாழ்க்கையை விடுவதை வட

வாழ்க்கைக்காக

காதலை துறப்பது மேல்……..

அணையா வழக்கு


சாலை ஓரமாய்

ஆயிரம் விழக்குகள் மின்னிடும்

அனால்

எனறும் அணையா வழக்காய்

             -------------ஏழையின் வயிறு

25 January 2011

அழகு

கடலுக்கு அலை அழகு……

அலைக்கு கரை அழகு……

கரைக்கு மண் அழகு…..

மண்ணுக்கு வாசம் அழகு……

வாசத்திற்கு பூக்கள் அழகு…….

பூவுக்கு பெண் அழகு……..

பெண்மைக்கு தாய்மை அழகு…….

தாய்மைக்கு பாசம் அழகு……..

பாசத்திற்கு உயிர் அழகு……….

உயிருக்கு உடல் அழகு……..

உடலுக்கு வயது அழகு………

வயதிற்கு காதல் அழகு…….

காதலுக்கு புனிதம் அழகு……..

புனிதத்திற்கு வாழ்க்கை அழகு…..

வாழ்க்கைக்கு நாம் அழகு……..

நமக்கு காலம் அழகு……..

காலத்திற்கு மரணம் அழகு…..

மரணத்திற்கு கல்லறை அழகு……

கல்லறைக்கு நம்-----

      வாழ்க்கை எனனும்-----

                   பாடம் அழகு-----

24 January 2011

காதலின் வேதனை


என் இனிய தென்றலே

நீ வீசிடும் நேரத்தில்

உன்னை தூற்றி கொள்ளவில்லை……

நீ இல்லா நேரத்தில்

இந்த அழகிய விழக்குகள்

வா வா என்று முத்தமிடுவதேன்…….

வாய் விட்டு அழவும் தெரியவில்லை

நீ வீசிடும் இந்த பொழுதை

மறக்கவும் முடியவில்லை…….

காதோரமாய் இனிய பாடல்கள்

என் நினைவுகளை

வருடிக்கொள்வதா-------

போதும்

நிறுத்தி விடு

என் உள்ளே

நான் மட்டுமாய் ஆசை படுகிறேன்

ஆனால்

ஏனோ தெரியவில்லை

என்றும் உன் நினைவால்

வாழ்வை இழந்திடுவேனோ……?......

23 January 2011

இடம் கொடுங்க


நட்சத்திரங்கள பல
ஜொலிக்க இடமில்லாமல்
துடிக்கிறது------
இடம் கொடுங்களேன்------
அதன் பிராகாசத்தை
பார்ப்போம்……
-------
இழைஞன்------

ஏக்கம்


அமைதியான வானம்

அழகான பூமி

அமைதியான இரவு ​

அழகான நிலா

மெல்லிய கொலுசின் ஓசை…….

                யார் அவள்?......

தேடிப்பார்த்தேன்-----

       கிடைக்வில்லை………

அலைந்து திரிந்தேன்-----

         காணவில்லை…….

      என்றும் அவளுக்காக------

இது ஒன்றும் காவியமல்ல


 

காவியம் என்று சொல்ல

இது ஒன்றும் புதிதல்ல

பல கவிஞர்கள் எழுதிய

எழுத்துக்களே…!......

கவிதை என்றால் என்ன?

     எழுத்துககள் ஒன்றாக சேர்த்து

         உயிர் கொடுப்பதா-----

             இல்லை

        புதிதாய பூத்திடும்

      மலரா கருத்துக்களா-----

 எனறோ ஒருவன் எழுதி வைத்தான்

     பெண்ணை தெய்வமென”

             ஏன்?........

------அவள் பிறப்பின வாசல் என்பதாலா-------!........

அதனால் தான் பெண் என்ற வார்த்தைக்கு மதிப்போ

       ஆனால் இன்றோ

     காலம் மாறி விட்டது………

மாற்றங்கள் தான்

      மனிதர்களை மாற்றுவதா-------

போதும் இந்த வேதனை

      காலத்தின் மாற்றஙகள் வேண்டாம்

நாகரிகம் எனற பெயரில்

ஒரு புதிய சகாப்தம் தேவைதான்

அதற்காக நம்மை

சீர்குலைக்க வேண்டாம்……….

      ------“எனறும் புதிதாய் மலர்ந்திடுவோம்

         சிந்தனையில் எழுர்ச்சி பெறுவோம்

           சந்ததிகளை மாற்றிடுவோம்”--------

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...