(“…..ஒரு அழகிய நகரமதிலே வாழும் இழைஞன் திசை
மாறிய பறவைாய்……….. கற்ப்பனை கலந்து…….”)
அவள் பெயர் வாசுகி, கணவன் பெயர் செல்வம். இந்த இவர்களுக்கு
பிறந்தவன் தான் பாலா. செல்வமோ பெயருக்கு தான் கணவன் குடும்பத்தில் சிறிதும் பொறுப்பில்லை. குடியே குடித்தனமாக கொண்டு வாழ்ந்து தன்
வாழ்வையே முடித்துக் கொண்டான். தன் கணவனால் அவளுக்கு கிடைத்ததோ
ஊர் முழுவதுமாக கடன் மட்டுமே.
அந்த பிஞ்சு வயது முதலே பாலாவோ கஸ்டங்களை மட்டும் பார்த்து
பார்த்தே வழர்ந்து வந்தான். வாசுகியோ ஏதோ வீட்டு வேலைகளை பார்த்து தன்
மகனை படிக்க வைத்து வந்தாள்.
பாலா நன்றாக படிப்பான் படு சுட்டி பையன். வாசுகியோ தினம் தினம்
தன் மகன் படிப்பதை கண்டு தான் படும் கஸ்டங்கள் ஒவ்வொன்றையும்
சந்தோசமாய் தாங்கிக் கொண்டாள்.
தன் மகனை தன்னால் முடிந்த வரை படிக்க வைத்தாள். அப்படியே சிறிது
காலம் ஓடியது. அவளும் நோய்வாய் பட்டு படுக்கையானாள். அப்பொழுது
பாலா 10ஆம் வகுப்பு தேர்வு முடித்த விடுமுறை காலமது. பாலாவோ தன்
அன்னையை காக்க வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். தனக்கு கிடைத்த
வருமானத்தில் தன் அன்னையின் மருத்துவ செலவையும் வீட்டு செலவையும்
பார்த்து வந்தான்.
அப்பொழுது தேர்வு முடிவுகளும் வந்தது பாலாவோ நல்ல மதிப்பெண்
பெற்றிருந்தான் அவனுக்கோ படிக்க வேண்டும் என்று ஆசை தான் என்ன
செய்வது என்று தெரியாமல் தவித்தான். தன் அன்னையையும் பார்த்து கொள்ள
வேண்டும் படிக்கவும் வேண்டும். எப்படியோ கஷ்டங்களை சமாளித்து ஒரு
வழியாக படிப்பை தொர்ந்தான்
சரியாக தூக்கம் இல்லை. இரவு நேரங்களிலும் வேலைக்கு செல்வன்.
அவ்வப்போது கிடைக்கும் சமைகளில் புத்தகங்களை புரட்டிக் கொள்வான்.
எப்படியோ ஒருவழியாக பள்ளி படிப்பை முடித்த சமயம் அது அவன்
அன்னையும் அவனை விடு பிரிந்தாள். சோகங்களை மட்டும் தெரிந்த
அவனுக்கு அதுவும் ஒரு சோகமாகத் தான் இருந்தது. அவனும் அனாதை
ஆனான். இருந்தும் தான் படிப்பை விடவில்லை தொடர்ந்து கல்லூரி படிப்பை
எட்டினான் பல கனவுகள் பூத்த வனாய்.
கல்லூரியல் தான் ஒரு ஏழையாக காட்டி கொள்ள மாட்டான். எல்லா
இளஞனை போல அவனும் கல்லூரியல் சகஜமாக தான் பழகுவான். கல்லூரி
முடித்ததும் வளக்கம் போல் வோலைக்கு சொல்வான். இப்படியாக அவன்
வாழ்வு ஓடியது.
அன்றும் அவ்வாறே வேலைக்கு சென்றான் அன்று அவன் வேலை
செய்யும் விடுதியில் இரு நபர்களின் பழக்கம் புதிதாய் கிடைத்து.
“..அந்த இருவரும் ஒரு தீவிரவாத இயக்கத்தை
சேர்ந்தவர்கள் என்பது பாலுவுக்கு தெரியாது.. ”
அவர்கள் இருவரும் பாலாவிடம் நெருங்கி பழகினார்கள். அவனை
தன்னுடன் கூட்டி செல்ல வாய்ப்பு தேடி காத்திருந்தனர். எந்த வாயிப்பும்
அவர்களுக்கு கிடைக்க வில்லை.
பின்னர் தானே வாயிப்பை உருவாக்கி கொண்டனர். பாலா வேலை
செய்யும் இடதில் இருத்து திருடி விட்டு பழியை பாலாவிடம் போட்டனர்.
பாலா வழக்கம் போல வேலைக்கு வந்தான். முதலாளியிடம் சென்று
தனக்கு செமஸ்டர் பீஸ் கட்ட வேண்டும் என்று சம்பளத்தை கேட்டான்.
“..அது அவனுக்கு கல்லூரி இறுதி ஆண்டு..”.
முதலாளியோ என்னிடமே திருடி விட்டு சம்பளமா கேட்கிறாய் என்று
சொல்லி உதைதான். பாலாவோ ஒன்றும் அறியாதவனாய் திகைத்தான். அவன்
என்ன சொல்லியும் முதலாளியோ கேட்ட பாடில்லை. அந்த மாத சம்பளமும்
அவனுக்கில்லை.
மனதை சற்று தேற்றிக் கொண்டவனாய் பரிட்சை எழுத பணம்
எவ்வாறு கட்ட என் யோசனையிலே வீதி ஓரமாய் நடந்தான்.
சரி கடன் வாங்கி கட்டி விடலாம் என்று சிறு தைரியத்தை
வரவழைத்து கொண்டவனாய் பாலா கடன் கேட்க ஆரம்பித்தான் அவன் கடன்
கேட்ட ஒவ்வொரு மனிதனும் சொன்ன பதில்கள் ஒவ்வொன்றும் பாலாவின்
இதையத்தில் ஈட்டி என பாய்ந்தது.
மனம் நொந்து சற்று குழம்பியவனாய் வரும் வழியில் அவன் வேலை
செய்த விடுதியில் பழகிய இருவரும் வந்தனர். ஒன்றும் அறியாதவர்களை
போல் பாலாவிடம் ஏன் என்று கேட்க மனம் நொந்தவனாய் அவனும்
ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான்.
“..கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல..”
அந்த இருவரும் பேச்சுக் கணைகளை தொடுத்தனர். அவர்கள் சொன்ன
ஒவ்வொரு வார்தைகளும் பாலாவிற்கு இதமாக இருந்நது. பாலா சற்றே
தடம்புரள ஆரம்பித்தான். பரிட்சை எழுத கட்ட வேண்டிய பணத்தையும்
கொடுத்தனர். கண்கள் கலங்கியவனாய் நின்றான்.
அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை ஒவ்வொன்றும் அவன்
சிந்தனையில் எழ மனம் நொந்து பாதை தடுமாறியவனாய் சென்றான்
அவர்களோடு.
மனிதா..!
நீ மனித இதையங்களை
சிதைக்க துடிப்பது
ஏன்…?
சிதைந்த இதையங்கள்
ஒவ்வொன்றும்
சிந்தனை இல்லாமல்
சிக்கி விட்டால்
சிக்கல்கள் தீர்ந்திடுமா-----
இல்லை
துப்பாக்கி தோட்டாக்களும்
மனித வெடி குண்டுகளுமே
தீர்வென்றால் என்றால்
நீ எதற்கு…..?
உதவி கரம் நீட்டி
மனிதம் மலர்ந்திட
இணைந்திடுவோம்
அன்பென்னும்
கூட்டினிலே…..
No comments:
Post a Comment