24 February 2011

பிள்ளை நிலா


கள்ளம் இல்லா பிள்ளை நிலா----
நீ என்னில் வந்த வெள்ளை நிலா.......
புன்னகை பூக்கும் வெள்ளை நிலா-----
நீ மண்ணில் பிறந்த செல்ல நிலா.......
தத்தி தவழும் செல்ல நிலா------
நீ கண்ணில் மிதக்கும் அன்பு நிலா....
கொஞ்சி உறவாடும் அன்பு நிலா-----
நீ கரங்களில் தவழும் பிஞ்சி நிலா.......
தத்தி பேசும் பிஞ்சி நிலா-------
நீ என்னில் பூத்த வெள்ளி நிலா.......
அழகாய் தூங்கும் வெள்ளி நிலா------
நீ மண்ணில் பிறந்த சொந்த நிலா.......

23 February 2011

புதைக்கப் பட்ட உலகம்




விழிக்கத் துடிக்கும்
கண்களுக்கு---- 
சாந்து பூசும்
உலகமடா இது……

இரு விழி
ஒன்று மூடிட-----
மறு விழி
ஒன்று துடித்திட------
கரு விழி
இரண்டும் கலங்கிட-------
நெஞ்சுருகும்
வேதனையடா இது…….

கரங்கள்
இரண்டும் துடித்திட------ 
கால்கள்
இரண்டும் கட்டிட------
பணக்கட்டுகளால்
புதைக்கப்பட்ட உலகமடா இது

புதைக்கப்பட்ட
பணக்கட்டுகளின் அடியில் 
கேட்டதோ
சில்லறை சத்தம்…..

சிந்திக்க நேரம் இல்லை 
சங்கதிகள் பல சொல்லாம்

சந்திக்க வந்வர்களோ!.....
வெள்ளாடை போர்த்தி----- 
வெள்ளாமை எடுத்து----
சந்ததிகளை காக்கும் ----
நய வஞ்சகர்கள்…….

இதை சிந்திக்க சொன்னால்
பட்டங்கள் பல கிடைத்திடும் ......
சட்டங்கள் கூட
பணக்கட்டுகளில் புதையுண்டு…---
விழித்திரை யாவும்
கலங்கிடும் 
குடிசைகள் யாவும்
விழித்திடும் வரை----- 
இந்த உலகம்
புதையுண்ட உலகமே!------
மனிதர்கள் யாவரும்
புதைக்கப் பட்ட
நடை பிணங்களே------

20 February 2011

தாலாட்டு பாடிட யார் ?.........


அனனை சொல்லும்
பாட்டு தாலாட்டு----
மழலை எழுந்திட
அமைதியாய் தூங்கவைக்கும்
பாட்டு அது தாலாட்டு……
               
கொஞ்சி பேசும்
மழலை கேட்கும்
பாட்டு தாலாட்டு-----
மன அமைதியாய்
தூங்க வைக்கும்
பாட்டு அது தாலாட்டு………

கண்களை மெல்ல
அசர வைககும்
பாட்டு தாலாட்டு-----
மழலை இனிமையாய்
கேட்டு ரசிக்கும்
பாட்டு அது தாலாட்டு……..

அராராரோ பாடிட
தாயும் இங்கு
இல்லையே
சேயும் வளர்ந்தது
தனி மரமாய்……

பெற்ற அன்னை
சென்றதோ வெகு தூரம்……

உன்னையும் குப்பை
என கூடையில்
இட்டு  சென்றாளே------
 
அறியா வயதில்
செய்த தவறினை
திரித்திட யாரும்
இங்கு இல்லையே…….

விரலை எடுத்து
ஒன்று இரண்டு
எண்ண வேண்டிய வயதில்
சிறை கம்பிபய
எண்ணி பளுதடைந்து
போனானே……..  

19 February 2011

புதிதாய் பூக்கட்டும்....


என் கனவுகளோடு
காலங்கள் சென்றிடலாம்……
என் நினைவுகளோடு
கூட காலங்கள் 
சென்றிடலாம் …….

நீங்கா உறவுகள்
பல பிரிந்திடலாம்---- 
நீங்கா நினைவுகள்
பல சென்றிடலாம்----

சொந்தங்கள்
பல வந்திடலாம்-----
சிந்தனைகள்
பல மற்றிடலாம்----

சீறி பாய்ந்திடும்
இளமை வந்திடலாம்----
அன்பை அரவணைக்கும்
காதலாய் மாற்றிடலாம்----- 

ஆனால்

தினம் தினம்
மாற்றங்களை விரும்பும்
மனிதருக்கு-----
மனதின் காயங்கள்
என்றும் அழியா தொடர்கதையா------

வெளிய சிரித்தும்…..
உள்ளே அழுதும்…..
வேசம் போடும் 
மனித இதங்கள் எத்தனை..?-----
இங்கு மட்டுமா-----
இல்லை
உலகளவிலா……

வேதனைகளை போட்டு
மறைக்கும் திரையாக---
ஒரு சின்ன இதயம்…… 
அதில் மாற்றங்கள்
எத்தனை..?---

மாற்றங்கள் விரும்பும்
இதயங்களில் புதிதாய்
பூக்கட்டும்
மனிதமும் மனிதநேயமும்…….  

14 February 2011

பனி முடிய மழை காலம்


பனி முடிய
அந்த மழைச்
சாரலிலே-----
கண்கள் தெரியாத
முகம் அது……
வெள்ளை ரோஜா
அரும்புவதுபோல்
மெல்ல நடந்து வரும்
சின்னக் குயிலின் ஓசை……..
என் அருகில்
மெல்ல வர----
பனியால் உறைந்து
நின்றிருந்த என்னை
போர்வையால்
முடிப் பிரிந்தாளே……. 

ஆனால-----

அந்த பனி முடிய
மழை கால
நினைவுகள் மட்டும்
நிழலாய் ……..

12 February 2011

அந்த விடுமுறை நாட்கள்

அந்த தெரு முனையில்
தான் அவள் வீடு…….
கொஞ்சம் அழகு தான்
யார் என்று தெரியாது ?.....
எங்கிருந்து வந்தாள்
என்பதும்  தெரியாது ?....
ஏதோ விடுமுறைக்காக 
வந்திருந்தாள்……..

கண்ணால பேசினாள்……
காதலை சொன்னாள்……
இதையங்களை மாற்றிக்
கொண்டோம்……

ஏதோ புது உணர்வு என்னிலே
காதலின் மோகத்தில்
என் கண்கள் கட்டப்பட்டன…….
கட்டப்பட்ட திரையிலும்
தெரிவது அவள்
முகம் மட்டுமே…….

இப்போதெல்லாம்
சுவாசிப்பது கூட
ஒரு வேலையாக 
தெரிகிறது…….

கவிதைகள் கூட
எழுதுகின்றேன் 
என்னையும்
கவிஞனாக்கி விட்டாயே…….

நினைவுகளோடும்
கனவுகளோடும்----
மட்டும்
உறவாடி கொள்கிறேன்------
நீ இல்லாத
இந்த பொழுதுகளில்……..

மீண்டும் அந்த விடுமுறை
நாட்களை எண்ணியே……….

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...