29 March 2011

என்றும் அழியாதவை

வாழ்க்கை என்பது
பூந்தோட்டமாய்
இருக்கும் வரை--- 
வாழ்வு என்பது
கல்லும்
முள்ளுமாய் தான்
இருக்கும்.....

அதில் மலர்ந்திடும்
பூக்கள் எல்லாம்
மணம் வீசுவதில்லை......

ஒரு சிலவை தான்
மணம் வீசுகின்றன.....

மணம் வீசும்
அந்த பூக்கள்
கால சுவடுகளால்
என்றும்
அழிக்கப் படுவதில்லை.....

28 March 2011

சாம்பலாவது யார்?...


வீசும் காற்றும்...

சீறும் அலையும்... 

சொல்லிடும் 

தமிழின் பெருமையை.....


சிந்தும் கண்ணீரும்.... 

பொங்கும் எரிமலையும்....

சொல்லிடும் 

எம் இழைஞனின் 

வேதனையும்---- 

அவன் வேலைக்காக 

அலையும் போர் களங்களும்... 


ஆம் !...

இன்னும் உள்ளது 

மனித நேயம்..... 


ஆனால் 


போராட்டம் முடிய வில்லை 

போரிடும் 

போர்க்களமே 

மாறி விட்டது.....


தீக் குளியல்களும்... 

கட்சி கொடிகளும்....

அரசியால் தலைவர்களுக்காக 

என்ற நிலை 

மாறி விட்டது....  


இதோ இளைஞன் 

விழித்து விட்டான்.....


அவன் முன்னே 

கட்டப்ட்டிருந்த திரைகள் 

எரிந்து விட்டன..... 


இனி சாம்பலாவது 

மனிதமும் 

மனித நேயமும் 

அல்ல----- 


ஜாதிகளும் 

கட்சிகளுக்காக எழுந்திடும் 

போர்க்களங்களுமே......

27 March 2011

சிறு கவிதைகள்



பொன் என்ற வார்த்தையில்

சரணடைந்தவன் 

பெண் என்ற வார்த்தையில்

பிணமானான்...

*******************************


ட்டை கொட்டினான்----

சில்லறை விழுந்தது.....

பூவை கொட்டினான்----

அடி விழுந்தது...

-முதுகில்

****************************

24 March 2011

என் தேவதை


பூத்து வளரும்

பூந்தோட்டமே 

     உன்னை வளர்த்தது யார் ?...

உன் பூக்களை

சூட வரும்

அந்த

  தேவதை யார் ?...

அந்த தேவதையே 

எனக்கு 

மனைவி ஆனால் 

பூக்களும் கூட

                                                                                                          பூத்திடுமே....

23 March 2011

புது ஜனனத்தை தேடி


இதோ 
புறப்பட்ட இதயங்கள்
வலுவிழந்து விட்டன...

ஓடி ஓடி 
உழைத்தக் கால்கள்
இழைப்பை தேடி
சோர்ந்து விட்டன....

வாழ்வின் எல்லை
இதோ---
மரணம் முன்னே
புது ஜனனத்தை தேடி.....

பகலவன்
மறைந்து விட்டான்....
சந்திரன்
மெல்ல தலையை தூக்கி
மாலை பொழுதை
கட்டியது....

நடந்தது என்ன ?...

கூண்டை
விட்டு கிழிகள்
சுகந்திரமாய்
பறப்பது போல -----

    "உயிர்"

உடம்பென்னும்
சிறை கூண்டை விட்டு
சுகந்திரமாய் பிரிந்தது.....

பாவ உலகில்
பாவியாய் வாழ்ந்தான்....

நிம்மதி பெருமூச்சுடன்
புறப்பட்டான்....

புது ஜனனத்தை தேடி........

22 March 2011

தன்னை இழ்ந்து


தன்னை இழந்து
ஒழி தரும் மெழுகே
நீ
என்ன
பாவம் செய்தாய்
ஒன்றும் அறியாத
நீ
உன்னை இழந்து
ஒழி தருகின்றாய்

ஆனால்

ஆறறிவு மனிதர்கள்
மிருகங்களாய்
மாறுவது
ஏன்?....

மத
  வெறியாலா?...
இல்லை
இன
  வெறியாலா?...

             பண
        வெறியாலா?...

           இல்லை
            ஜாதி
        வெறியாலா?...

                                        

காதலியாய் பார்த்த உன்னை---


காதலியாய்
பார்த்த உன்னை--
மண மகளாய் பார்க்க
நெஞ்சம் வலிக்கிறது....
 உனக்காக
பூக்களை சூடிய
கைகள் இன்று
உன்னை தொட
மறுக்கிறது...
 என்
உயிரில்
கலந்திட்ட உன்னை
தொலைத்தால்
நானும் இங்கு
   ஏனடி...?...                                           .                      



21 March 2011

தொடரும் ஓடம்


சூரியனை கண்ட
பனி மறைவது
போல....
சந்திரனோ
ஒழி இழந்தது.....
சூரியனோ
ஒழி கொடுக்க
மறுத்தது.....

ஒளிர வேண்டிய
நட்சத்திரங்கள் 
மோகங்களின்
இடையே---
என்றாவது
மேகங்கள் மறையும்
என்ற நம்பிகையுடன்.....

கண்களை கட்டி
காட்டில்
விட்டார் போல....

விழி தெரியாமல்
வழி தேடி
கட்டவுழ்த்திட
போராட்டம்.....
தொடர்ந்து ஓடம்
முடியவில்லை…. 


20 March 2011

உயிருள்ள உணர்வுகள்


நிறம் மாறாத 

உன் விழிகளில் 

வழியும் நீர் துளி 

இன்று 

என் விழிகளை 

மட்டும் மூட செய்தது 

ஏனடி--?...


விழி தெரியாமல் 

வழி தேடி அலையும் 

என் கண்களை 

உன் கைதியாக்கி போவது 

ஏனடி...?—


றவு என்று சொன்னாய்---

உயர் என்று சொன்னாய்---

புரியவில்லை....

புரிந்தது 

என் உயர் பிரிந்த பின்பு ---



தொலைந்து போன

இதயமதிலே----- 

தொலையா

கனவுகளாய்--- 

உன் நினைவுகள்.....



19 March 2011

கருவறையே கல்லறையா....


கற்ப்பும் உயிரும்
ஒன்று தானே--- 
அதில் தோன்றிடும்
உயிரை மட்டும்
அழிப்பதேனடி----
பெண்ணே….!

பிறக்கும் முன்னே தங்கிய
 கருவறை கல்லறையா..?--“

தாய்மை என்பது
உனக்குரிய
புனிதமான இடம் 
என்று தெரியாதா…..

கண்ணெதிரே காணும்
உயிரை அழித்தால்
சட்டங்கள் பல…..

அனால்

உன்னிலே தோன்றிய
கருவும் உயிர் தானே---- 
அதை அழித்தாலோ--
சட்டங்கள் ஏது..?..
தண்டனைகள் எங்கே..?..

மொடானது மலரும்  முன்னே
  மடிய வேண்டிய கட்டாயம்……”

  சமுதாயமே--!...

அரசியல் சாசனத்தை
திருத்தி எழுது……

கருசிதைவுக்கு
மரணத்தை விட
கொடிய தண்டனை
என்று…….

12 March 2011

புது உலகம் படைக்க....


யிரம் ஆயிரம்
எண்ணங்களில்----
சின்ன சின்ன
நினைவுகள் தோன்றட்டும்.......

சின்ன சின்ன
நினைவுகளில்-----
புது புது
கனவுகள் தோன்றட்டும்......

புது புது
கனவுகளில்-----
சின்ன சின்ன
மின்னல்கள் தோன்றட்டும்......

சின்ன சின்ன
மின்னல்களில்----
புது புது
கவிதைகள் தோன்றட்டும்.....

புது புது
கவிதைகளில்------
சின்ன சின்ன
கருத்துக்கள் தோன்றட்டும்......

சின்ன சின்ன
கருத்துக்களில்----
புது புது
உலகம் தோன்றட்டும்........ 

10 March 2011

என்னோடு உன் காதல்


அன்பே இது என்ன நிஜமா---
நீ எந்தன் வானில்
வந்த விண்மீனா--------

நிலவும் தான் இன்று
கலைகிறது---- 
உன் விழி கண்ட
வெட்கத்தில் ----
மேகங்களின் இடையே
ஒளிந்து கொண்டு.......

மேகங்கள்
என்ன செய்யும்?....

ஒளிவதற்கு இடம்
இல்லையே...!

உனக்கு ஒன்னு
தெரியுமா---- 
நீ அந்த
பிரம்மன் படைத்த 
அழிகிய சிற்பம்...... 
எனக்காக எழுதப்
பாடாத காவியம்.....

காதல் என்னும்
வலைக்குள்ளே
பின்ன பட்ட
ஓவியம் ......

வாழ்க்கை என்னும்
காகிதத்தில்----
கலைக்கப்பட்ட ஓவியமாய்
நம் காதல்.......

நீயும் சென்றாய்
சிரித்துக் கொண்டு..... 

புரிந்து கொண்டேன்----
வேசம் என்று.......

நீ என்னை கண்ட
அந்த சிறு நொடியில்....

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...