இதோ
நாட்டின் முதுகெலுப்பு
என்ற
இளைய சமுதாயம்
நாதி இல்லாமல்
திண்டாட்டம்....
எம்
இளைய சமுதாயத்தை
காத்திட
சட்டங்கள் இல்லையா....
இல்லை
சட்ட திரைகளில்
பண கட்டுகளா---
லஞ்சம்—லஞ்சம்—லஞ்சம்--
எல்லாம் அதனுள் தஞ்சம்...
தஞ்சம் புகுந்தவனுக்கோ
கொண்டாட்டம்....
கொடுத்தவனுக்கோ
திண்டாட்டம்....
வெற்றிகள் பல சூடி
வாழ வேண்டிய வயதில்
ருபாய் கட்டுகள் போட்டு
வெற்றியை பறித்து கொள்ளும்
அரக்க சமுதாயம்....
“சாதிகள் இல்லை அடி பாப்பா”
என்று சொன்னான் பாரதி....
ஆனால் இங்கு
பிறப்பு முதல்
இறப்பு வரை
சதியும் மதமும் தான்
எங்கு சென்றாலும்
முதலில்
கேள்வியாக வருவது
“எந்த சாதி
எந்த மதம்”
இங்கே
சாதிக்கோ
பஞ்சம் இல்லை....
சாதிக்கான வீதிக்கும்
பஞ்சம் இல்லை....
ஆம்
எல்லாம் உள்ளது
ஆனால்
மனிதனை அளிக்கும்
ஒரே பஞ்சம்
பசி என்னும் கொடுமை
இதுவே
இளைய தலைமுறையை
திசை மாற்றி செல்லும்
முதல் படி...
No comments:
Post a Comment