விழிக்கத் துடிக்கும்
கண்களுக்கு----
சாந்து பூசும்
உலகமடா இது……
இரு விழி
ஒன்று மூடிட-----
மறு விழி
ஒன்று துடித்திட------
கரு விழி
இரண்டும் கலங்கிட-------
நெஞ்சுருகும்
வேதனையடா இது…….
கரங்கள்
இரண்டும் துடித்திட------
கால்கள்
இரண்டும் கட்டிட------
பணக்கட்டுகளால்
புதைக்கப்பட்ட உலகமடா இது
புதைக்கப்பட்ட
பணக்கட்டுகளின் அடியில்
கேட்டதோ
சில்லறை சத்தம்…..
சிந்திக்க நேரம் இல்லை
சங்கதிகள் பல சொல்லாம்…
சந்திக்க வந்வர்களோ!.....
வெள்ளாடை போர்த்தி-----
வெள்ளாமை எடுத்து----
சந்ததிகளை காக்கும் ----
நய வஞ்சகர்கள்…….
இதை சிந்திக்க சொன்னால்
பட்டங்கள் பல கிடைத்திடும் ......
சட்டங்கள் கூட
பணக்கட்டுகளில் புதையுண்டு…---
கலங்கிடும்
குடிசைகள் யாவும்
விழித்திடும் வரை-----
இந்த உலகம்
புதையுண்ட உலகமே!------
மனிதர்கள் யாவரும்
புதைக்கப் பட்ட
நடை பிணங்களே------
விழிகள் துடிக்கும்
ReplyDeleteஓசை
செவிகளுக்கு புரிவது
இல்லை
கண்களில் வர்ணங்கள்
உற்று நோக்கிடுவார்
கலங்கிடும் கண்களை
எறேடுத்துப்பாரர்
சாந்து பூசிய
முகமே சகவாசங்கள்
சந்தானம் எதுவென்று
இன்னும் புரிந்திடார்
இவ்வுலகில்
விந்தை உலகமென்று
சொல்வதில் வியப்பில்லை
என்கிறாள் புங்கை
tnku......
ReplyDelete